பெங்களூரு, ஜூலை 24 - கர்நாடக மாநிலத்தில், கடந்த 14 மாதங்களாக நடை பெற்று வந்த காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சியை, திட்ட மிட்டபடி குதிரை பேரம் பாஜக கவிழ்த்துள்ளது. தற்போது கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கர்நாடக மாநிலத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி ஆளும் மத்தி யப்பிரதேச மாநிலத்திலும் ஆட்சிக் கவிழ்ப்பை அரங் கேற்ற பாஜக திட்டமிட் டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மத்தியப் பிரதேச மாநி லத்தில், மொத்தமுள்ள 230 சட்டமன்ற தொகுதிக ளுக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 114, பாஜக 109 தொகுதிகளில் வெற்றி பெற்றன. பெரும்பான் மைக்கு 116 தொகுதிகள் வேண்டும் என்ற நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் 2 உறுப்பினர்கள், சமாஜ் வாதி கட்சியின் 1 உறுப்பி னர், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேரின் ஆதர வுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. எப்படி பார்த்தாலும், ஒருசில எம்எல்ஏ-க்களின் ஆதரவில்தான் தற்போதைய காங்கிரஸ் ஆட்சி தொடர் கிறது. எனவே, இங்கு வெகு எளிதாகவே காங்கிரஸ் ஆட்சி யைக் கவிழ்த்து விடலாம் என்று பாஜக கணக்கு போட்டிருப்பதாகவும், அதற்கேற்ப ஆள்பிடி வேலையை ஆரம்பித்து விட்டதாகவும் கூறப்படு கிறது.